இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் அப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எமது தந்தையார் அவர்கள்


மண்ணில் ...................................... விண்ணில்
10.04.1927 ........................................ 24.04.2006

தோத்திரப்பாடல்கள்

விநாயகர் துதி


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

தேவாரம்

பூவினுங் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுங் கருங்கலம் அரணஞ் சாடுதல்
கோவினுங் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுங்க கருங்கலம் நமச் சிவாயவே.

திருவாசகம்

அன்றேயென்றென் ஆவியூம் உடலும்
உடமை யெல்லாமும்
குன்றே யனையாம் என்னை யாட்கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றௌரிடையூ+று
எண் தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே.

திருவிசைப்பா

ஏக நாயகனை இமயவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை யெதிரில்
போக நாயகனைப் புயல் வண்ணற் கருளிப்
பொன்னெடுங் சிவிகை யாவூ+ர்ந்த
மேக நாயகனை மிரு திரு விழி
மிழலை விண்ணிழி செழுங் கோயில்
யோக நாயகனை யன்றி மற்றொன்றும்
உண்டென வூணர்கிலேன் யானே.

திருப்பல்லாண்டு

மிண்டு மனத்தவர் போமின் கண்
மெய்யடியார்கள் விரைந்து வமிமின்
கோண்டுங் கொடுத்துங் குடிகுடியீசர்க்
காட செய்மின் குழாம் புகுந்த
தண்டங்கடந்த பொருளை வில்லதோ
ரானந்த வெள்ளப் பொருள்
பண்டுமின்று மென்று முள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்.

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் குமிபடப் பெற்று
மண்ணிலே வந்த இப்பிறவியிலே எனக்கு
வலிதான் இன்பமாம் என்ற
கண்ணிலானந்த அருவி நீர் சொரியக்
கைமலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.