தேவாரம்

பூவினுங் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுங் கருங்கலம் அரணஞ் சாடுதல்
கோவினுங் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுங்க கருங்கலம் நமச் சிவாயவே.