திருவிசைப்பா

ஏக நாயகனை இமயவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை யெதிரில்
போக நாயகனைப் புயல் வண்ணற் கருளிப்
பொன்னெடுங் சிவிகை யாவூ+ர்ந்த
மேக நாயகனை மிரு திரு விழி
மிழலை விண்ணிழி செழுங் கோயில்
யோக நாயகனை யன்றி மற்றொன்றும்
உண்டென வூணர்கிலேன் யானே.